EPF கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு Employees’ Provident Fund Organisation (EPFO) சமீபத்தில் ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொதுவாக புதிய வேலைக்கு சேர்ந்தபோது சம்பளம் மற்றும் பதவி பற்றியே அதிக கவனம் செலுத்துவோம். ஆனால் EPF தொடர்பான விவரங்களை சரியாக பராமரிக்காதது எதிர்காலத்தில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.
EPFO வின் அறிவிப்பின்படி, இரண்டு முக்கிய தகவல்கள் மிகவும் கவனமாக சரிபார்க்கப்பட வேண்டும்:
- பணியில் சேர்ந்த தேதி (Joining Date)
- பணியிலிருந்து வெளியேறிய தேதி (Exit Date)
இந்த தேதிகளில் சிறிய தவறு இருந்தாலும் அது உங்கள் முழு சேவை வரலாற்றையும் பாதிக்கலாம். இதன் காரணமாக PF தொகை கணக்கீடு, ஓய்வூதியம் மற்றும் கிளெயிம் செயல்முறைகள் தாமதமாகலாம் அல்லது முடங்கக்கூடும்.
மேலும், உங்கள் EPF பதிவில் சேவைக்காலம் 5 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் PF தொகையை எடுத்துக்கொள்ளும் போது வரி விதிக்கப்படும். அதோடு TDS-மும் பிடித்தம் செய்யப்படும்.
இதனால், உங்கள் EPF கணக்கில் உள்ள அனைத்து விவரங்களையும் சரியாக பதிவு செய்து, அவற்றை அவ்வப்போது சரிபார்ப்பது மிகவும் அவசியமாகிறது. ஒரு சிறிய பிழை கூட உங்கள் நிதி பாதுகாப்பை பாதிக்கக்கூடியதாக இருக்கும்






